Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு மாவட்டத்தில் காச நோய் பிடியில் 2,158 பேர் "டாட்ஸ்' சிகிச்சைக்கு டாக்டர்கள் வேண்டுகோள்

ஈரோடு மாவட்டத்தில் காச நோய் பிடியில் 2,158 பேர் "டாட்ஸ்' சிகிச்சைக்கு டாக்டர்கள் வேண்டுகோள்

ஈரோடு மாவட்டத்தில் காச நோய் பிடியில் 2,158 பேர் "டாட்ஸ்' சிகிச்சைக்கு டாக்டர்கள் வேண்டுகோள்

ஈரோடு மாவட்டத்தில் காச நோய் பிடியில் 2,158 பேர் "டாட்ஸ்' சிகிச்சைக்கு டாக்டர்கள் வேண்டுகோள்

ADDED : ஜூலை 23, 2011 01:09 AM


Google News

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், ஓராண்டில் மட்டும், 2,158 பேர், காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறியாமையால் சிகிச்சையை தொடராதது தான், காச நோய் அதிகரிப்புக்கு காரணம் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாலை நேர காய்ச்சல், இரண்டு வாரத்துக்கு மேல் இருமல், இருமலால் நெஞ்சுவலி, பசியின்மை, எடை குறைதல் ஆகியவைதான் காசநோய்க்கான அறிகுறிகள். காச நோயை விரட்ட, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. டாக்டர்களின் நேரடிப்பார்வையில் குறுகிய காலத்தில் குணமாகக்கூடிய வகையில் சிறப்பான சிகிச்சையை, அரசு மருத்துவமனைகள் அளிக்கின்றன. ஓராண்டில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில், 2,158 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பொதுமக்களின் அறியாமையால், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், அதனால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவப் பணிகள் (காசநோய் பிரிவு) துணை இயக்குனர் ராஜசேகரன் கூறியதாவது: காசநோய் என்பது பரம்பரை வியாதி அல்ல; ஆனால் தொற்றுநோய். ஈரோடு மாவட்டத்தில், 2010-2011ல் மட்டும், 2,158 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதத்தில், 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில், 27 காசநோய் பரிசோதனை கூடங்களும், ஈரோடு, சென்னிமலை, அத்தாணி, புஞ்சைபுளியம்பட்டி, டி.என்.பாளையம் ஆகிய பகுதியில் மருந்து கிடங்குகளும், காசநோய் மையங்களும் அமைக்கப்பட்டு, திருத்தி அமைக்கப்பட்ட காசநோய் தடுப்பு திட்டம் ('டாட்ஸ்') முறையில், டாக்டர்களின் நேரடிப்பார்வையில் மருந்து அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ஆறு முதல் எட்டு மாதங்கள் சிகிச்சை பெற்றால், காசநோயில் இருந்து குணமடையலாம். காசநோய் அறிகுறிகள் குறைந்தாலும், சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஈரோடு மாவட்டத்தில், 'டாட்ஸ்' சிகிச்சை முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதார சங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் காசநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us