ADDED : செப் 04, 2011 10:52 PM

புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங் அரசு முறைப் பயணமாக, நாளை வங்கதேசம் செல்கிறார்.
அவர் அங்கு, இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் போது, இருநாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இந்த பயணத்தின் போது, வங்கதேச எல்லையில் அமைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்களையும் பங்கேற்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்து இருந்தார். இதையேற்று பிரதமருடன் , மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் செல்வதாக, முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவர் செல்லவில்லை என, தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, மம்தா பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. பிரதமர் பயணத்தின் போது, டீஸ்டா ஆற்று நீரை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வது குறித்து, ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்த டீஸ்டா நீர் திட்டம் குறித்து, மம்தா அதிருப்தியடைந்துள்ளதால், அவர் வங்கசேதம் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.