Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பருத்தி வரத்து குறைவால் விலை உயர்வு

பருத்தி வரத்து குறைவால் விலை உயர்வு

பருத்தி வரத்து குறைவால் விலை உயர்வு

பருத்தி வரத்து குறைவால் விலை உயர்வு

ADDED : ஆக 05, 2011 12:46 AM


Google News
அவிநாசி : அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த பருத்தி ஏலத்துக்கு 1,017 மூட்டை வரத்தாக இருந்தது.

இது, கடந்த வாரத்தை விட, 1,350 மூட்டை குறைவு. வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது.அனைத்து ரகங்களின் விலை விவரம் (குவிண்டாலுக்கு) வருமாறு:எல்.ஆர்.ஏ., ரூ.3,150 முதல் 3,400 வரை, ஆர்.சி. எச்., எம்.சி.யு., 5, ரூ.3,300 முதல் 3,850 வரை, டி.சி. எச்., ரூ.3,600 முதல் 3,875 வரை மற்றும் மட்டம் ரூ.1,800 முதல் 2,200 வரை.சங்க தனி அலுவலர் பழனிசாமி கூறுகையில், ''எல்.ஆர்.ஏ., - ஆர்.சி. எச்., - டி.சி.எச்., ரகங்கள், குவிண்டாலுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை உயர்ந்தது. ரூ.13.52 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us