/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுனாமி நிதியுதவியை உயர்த்த கோரிக்கைசுனாமி நிதியுதவியை உயர்த்த கோரிக்கை
சுனாமி நிதியுதவியை உயர்த்த கோரிக்கை
சுனாமி நிதியுதவியை உயர்த்த கோரிக்கை
சுனாமி நிதியுதவியை உயர்த்த கோரிக்கை
ADDED : ஆக 18, 2011 04:33 AM
புதுச்சேரி : வீடு கட்டுவதற்கான நிதியுதவியை அதிகரித்து வழங்க வேண்டும் என மீனவ மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் வீரமணி, முதல்வருக்கு அளித்துள்ள மனு: சுனாமியால் பாதிக்கப்பட்ட வம்பாகீரப்பாளையத்தில் 1500 குடும்பங்கள் உள்ளன.
இதில், 550 குடும்பத்திற்கு மட்டும் அவரவர் இருக்கும் இடத்தில் 3.25 சதுரத்தில் வீடு கட்ட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால், வீடு கட்ட ரூ.5 லட்சம் செலவாகிறது. என்.ஆர். காங்., தேர்தல் அறிக்கையில், மீனவர்கள் வீடு கட்டுவதற்கான தொகையை ரூ.5 லட்சமாகவும், பழுதடைந்த கல் வீடுகளைப் புனரமைப்பதற்கான நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என கூறப்பட்டது. எனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.