ADDED : செப் 30, 2011 01:30 AM
தேனி : தேனி பழனிசெட்டிபட்டி கம்பம் ரோட்டில் புதிய முகவரியில் ஸ்ரீராம் சிட்ஸ் திறக்கப்பட்டுள்ளது.
தேனி கம்பம் ரோட்டில் பழனிசெட்டிபட்டியில் டி.கே.எஸ்., 2வது தளத்தில், (எஸ்.பி.ஐ., வங்கி மேல்மாடியில்), ஸ்ரீராம் சிட்ஸ் தேனி கிளையான ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் லிமிட்டெட் திறக்கப்பட்டுள்ளது. இங்கு நகைக்கடன் பிரிவு தனியாக தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் குழுமங்களின் துணைத்தலைவர் சரவணக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட ஏ.டி.எஸ்.பி., செல்வராஜ், தேனி வர்த்தக சங்க நகர செயலாளர் கே.எஸ்.கே., நடேசன், தொழிலதிபர் அழகேசன், தேனி மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் ரவிக்குமார், கிளை மேலாளர் சுரேஷ், முதுநிலை மேலாளர் முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.