Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சத்தீஷ்கரில் காங். எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

சத்தீஷ்கரில் காங். எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

சத்தீஷ்கரில் காங். எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

சத்தீஷ்கரில் காங். எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

ADDED : ஆக 30, 2011 02:46 AM


Google News
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் உரத்தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சியினர் நடத்திய அமளியால் சபை நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் சபாயநாயகர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 37 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஒரு பகுஜன்சமாஜ்கட்சி எம்.எல்.ஏ.க்கள் என 38 எம்.எல்.‌ஏ.க்களை கூண்டோடு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சத்தீஷ்கர் மாநில சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று நடந்தது. முதல்வராக பா.ஜ.க.வின் ராமன்சிங் உள்ளார். ‌இதில் 90 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபைக்கு பா.ஜ.சார்பில் 49 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 39 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒரு பகுஜன்சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. உள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் ‌போது எதிர்க்கட்சித்தலைவரான காங்கிரஸ் கட்சியின் ரவீந்திராசெளபே பேசினார். அப்போது அவர் கூறுகையில், மாநிலத்தில் கடும் உரத்தட்டுப்பாடு நிலவியுள்ளது. உரவிலை மூன்று மடங்கு அதிகரித்துவிட்டது. ‌கரீப் பருவம் துவங்கியுள்ள இந்த நேரத்தில் செயற்கையாக உரத்தட்டுப்பாடு உருவாகியுள்ளதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கள்ளச்சந்தையில் உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என குற்றம்சாட்டினார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து உரத்தட்டுப்பாடு குறித்து ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு பகுஜன்சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. என 38 எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்தினர். தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால், சபாநாயகர் தரம்லால்கவுசிக், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை கூண்டோடு சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார். நேற்று இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபைக்கு வராததால் சபைக்கு வந்திருந்த 37 காங். எம்.எல்.ஏ.க்களும் கூ்ண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us