Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/முதுமலையில் அதிகரிக்கும் பார்த்தீனியம்

முதுமலையில் அதிகரிக்கும் பார்த்தீனியம்

முதுமலையில் அதிகரிக்கும் பார்த்தீனியம்

முதுமலையில் அதிகரிக்கும் பார்த்தீனியம்

ADDED : ஆக 30, 2011 12:28 AM


Google News
கூடலூர் : முதுமலையில், பார்த்தீனியம் செடிகள் அதிகரித்து வருவதால், அதை அகற்றும் பணியை உடனடியாக துவக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டம், முதுமலையில், அதிகளவில் காணப்படும் பார்த்தீனியம் செடிகளினால், மனிதர்களுக்கு ஒவ்வாமை நோய், சுவாச பிரச்னை தொடர்பான நோய்கள் ஏற்படும் என, ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் போன்று, வன விலங்குகளுக்கும் இச்செடிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. புற்களுடன் இந்த செடியை உண்பதால், வாயில் புண் ஏற்பட்டு உடல் பாதிப்பு, சுவாச கோளாறு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதை அழிக்க, அவ்வப்போது வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுத்தாலும், முழுமையாக கட்டுபடுத்த முடியவில்லை. இந்நிலையில், பார்த்தீனியம் செடிகளை முழுமையாக அழிக்க, மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளது, வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்படி, பார்த்தீனியம் விஷ செடிகளை அழிக்கும் பணியை, சர்வதேச புகழ் பெற்ற தெப்பகாடு யானைகள் முகாம் அமைந்துள்ள, முதுமலை புலிகள் காப்பகத்தில் துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us