/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநகராட்சி நிர்வாக முறைகேடுகளுக்கு விசாரணை கமிஷன் தேவைமாநகராட்சி நிர்வாக முறைகேடுகளுக்கு விசாரணை கமிஷன் தேவை
மாநகராட்சி நிர்வாக முறைகேடுகளுக்கு விசாரணை கமிஷன் தேவை
மாநகராட்சி நிர்வாக முறைகேடுகளுக்கு விசாரணை கமிஷன் தேவை
மாநகராட்சி நிர்வாக முறைகேடுகளுக்கு விசாரணை கமிஷன் தேவை
ADDED : ஜூலை 12, 2011 12:14 AM
மதுரை : 'மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தி,' அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் முன்னிலையில் நடந்த விரிவாக்க சிறப்பு கூட்டத்தின் விவாதம்:சாலைமுத்து(எதிர்கட்சி தலைவர்): பிரபல ஓட்டல் அருகே இடப்பிரச்னை ஒன்றில், துணை மேயருக்கு 38 லட்சம் ரூபாய் கைமாறியுள்ளது. துணைமேயர் மன்னன், தனது மனைவி பெயரில் நகர் அமைப்பு சட்டத்திற்கு எதிராக வீடு கட்டி வருகிறார். நகரமைப்பு அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை?
முருகேசன்(நகர் அமைப்பு
அலுவலர்): இது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
கமிஷனர்: கோர்ட் ஆணையால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் இருந்தது. மீண்டும் அது குறித்து
விசாரிக்கப்படும்.
சாலைமுத்து: தி.மு.க., பெரும்புள்ளி, சுடுகாட்டு பகுதியை ஆக்கிரமித்ததில், அதிகாரிகளின் செயல்பாடு என்ன?
கணேசன்(மார்க்சிஸ்ட் குழுத்
தலைவர்): மாநகராட்சியில் நடந்த நிலமோசடி புகாரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2006ல் இருந்து சொத்து பட்டியல் கேட்டும், இதுவரை பதில் இல்லை. அனுப்பானடி அருகே கேட்லாக் ரோட்டில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் நிறைய உள்ளன. இவை யாருக்கு சொந்தமானவை?
முருகேசன்: பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலமாகும்.
கமிஷனர்: சம்பந்தப்பட்ட
இடத்தில் நேரடி ஆய்வு நடத்தி,
நடவடிக்கை எடுக்கப்படும்.
கணேசன்: கடந்த ஐந்து ஆண்டில் மாநகராட்சி சொத்துகள் அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளன. மேயர் உறவினர்களுக்கு கடை உரிமம் அளித்த விவகாரத்தில், இதுவரை நடவடிக்கை இல்லை. கமிஷனர் போல, தனியார் என்.ஜி.ஓ., அதிகாரம் செலுத்தி வருகிறது. 'ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டம், ரிங்ரோடு வசூல், 'ஈகோ பார்க்' வசூல், மேலவாசல், ராஜாக்கூர் கட்டடம் கட்டியது, கனரக வாகனம் வாங்கியது, ஒப்பந்த ஊழியர் சம்பளம், மாநகராட்சியின் நிலங்கள்,' என, ஏகத்துக்கும் மோசடி நடந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் கடந்த கால செயல்பாடுகளை, 'விசாரணை கமிஷன்' அமைத்து விசாரிக்க வேண்டும். இதை வலியுறுத்தி
வெளிநடப்பு செய்கிறோம்(அ.தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் பங்கேற்றன).