மின் கம்பங்களில் கம்பிகள் திருட்டு
மின் கம்பங்களில் கம்பிகள் திருட்டு
மின் கம்பங்களில் கம்பிகள் திருட்டு
ADDED : ஜூலை 11, 2011 11:50 PM
ஓசூர் : சூளகிரி அருகே மின் கம்பத்தில் இருந்த, 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள
மின் கம்பிகளை திருடி சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சூளகிரி
அடுத்த கட்டுகானப்பள்ளியில் சாதிக் பாட்ஷா என்பவரது தோட்டத்தில் உள்ள
கிணற்றில் மின் விநியோகம் செய்ய, 10 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள், 10 மின் கம்பங்களில் இருந்த, 2 லட்ச
ரூபாய் மதிப்புள்ள மின் கம்பிகளை திருடி சென்றுள்ளார். இது குறித்த அந்த
பகுதி மின்வாரிய அதிகாரிகள் சூளகிரி போலீஸில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் தனசேகரன் மின் கம்பிகளை திருடி சென்றவர்களை தேடி வருகிறார்.
சூளகிரி பகுதிகளில் திருடும் கும்பலை விரைந்து பிடிக்க வேண்டும்.