ADDED : ஜூலை 11, 2011 09:24 PM
உடுமலை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்
உடுமலை நகராட்சி அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தாலுகா தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். தாலுகா
செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். உடுமலை நகராட்சி 29 வது வார்டு
கருணாநிதி காலனியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு இல்லாமல் கிடக்கும்
பொதுக்கழிப்பிடத்தை புதுப்பிக்க வேண்டும்.பாலாஜி நகர் செல்வதற்கு நடைபாலம்
அமைக்க வேண்டும். 33 வது வார்டு டி.வி., பட்டணத்தில் வீடுகளுக்குள்
சாக்கடை செல்லும் அவலத்தை போக்க சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும். நகராட்சி
பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த சுகாதார பணியாளர்களை அதிகப்படுத்த
வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைககள் வலியுறுத்தப்பட்டது.மா.கம்யூ.,
மற்றும் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளபாளையம் நிர்வாகி ஜெகதீஷ் நன்றி கூறினார்.