/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மாணிக்கபுரத்தில் பகுதிநேரரேஷன் கடை திறப்பு விழாமாணிக்கபுரத்தில் பகுதிநேரரேஷன் கடை திறப்பு விழா
மாணிக்கபுரத்தில் பகுதிநேரரேஷன் கடை திறப்பு விழா
மாணிக்கபுரத்தில் பகுதிநேரரேஷன் கடை திறப்பு விழா
மாணிக்கபுரத்தில் பகுதிநேரரேஷன் கடை திறப்பு விழா
ADDED : ஜூலை 11, 2011 04:14 AM
முசிறி: திருச்சி மாவட்டம், தா.பேட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட
மாணிக்கபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.தமிழக கால்நடை
மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சிவபதி பங்கேற்று பகுதி நேர ரேஷன் கடையை
திறந்து வைத்து பேசியதாவது:மாணிக்கபுரம் பகுதிநேர அங்காடியில் பிள்ளாத்துறை
தொட க்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டிலுள்ள தேவானூர்
அங்காடியிலிருந்து 100 குடும்ப அட்டையை பிரித்தும், ஆராய்ச்சி
அங்காடியிலிருந்து 98 குடும்ப அட்டையை பிரித்தும் மொத்தம் 198 குடும்ப
அட்டைகளுடன் இந்த அங்காடி தனியார் கட்டிடத்தில்
துவங்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., தொகுதி நிதியிலிருந்து இந்தாண்டே
அங்காடிக்கு சொந்தக் கட்டிடம் கட்டித்தரப்படும். முசிறியிலிருந்து மா
ணிக்கபுரம், தேவானூருக்குபஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும்.இவ்வாறு அவர்
பேசினார்.முசிறி ஆர்.டி.ஓ., ஜெயஷீலா, டி.எஸ்.ஓ., (பொ) அர்சுணன், கூட்டுறவு மண்டல
இணைப்பதிவாளர் ஜெயம்பாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர்
ராஜேந்திரபிரசாத், இணைப்பதிவாளர் (பொது வினியோகத் திட்டம்) சிராஜுதீன்,
முசிறி தாசில்தார் (பொ) சாவித்திரி உட்பட பலர் பங்கேற்றனர்.