நதிநீர் இணைப்புக்கு மாற்றுதேசிய நீர்வழிச் சாலை திட்டம்:பொறியாளர் ஏ.சி.காமராஜ் யோசனை
நதிநீர் இணைப்புக்கு மாற்றுதேசிய நீர்வழிச் சாலை திட்டம்:பொறியாளர் ஏ.சி.காமராஜ் யோசனை
நதிநீர் இணைப்புக்கு மாற்றுதேசிய நீர்வழிச் சாலை திட்டம்:பொறியாளர் ஏ.சி.காமராஜ் யோசனை
ADDED : செப் 25, 2011 06:14 AM
மதுரை:''நதிநீர் இணைப்புக்கு மாற்றாக, தேசிய நீர்வழிச் சாலை ஏற்படுத்த வேண்டும்'' என, தேசிய நதிநீர் இணைப்பு உயர்மட்டக் குழு உறுப்பினர், ஏ.சி.காமராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:நாட்டில் ஒருபுறம் வெள்ளம், மறுபுறம் வறட்சியாக உள்ளது.
நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இதுபோன்ற பிரச்னைக்குத் தீர்வுதான், நதிநீர் இணைப்புத் திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் பிரச்னைகள் உள்ளதாக, பல மாநிலங்கள் தெரிவித்தன. எனவே, 'கங்கா-காவிரி தேசிய நீர்வழிச் சாலை' திட்டத்தை தெரிவித்துள்ளேன்.
இத்திட்டத்தை, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் டில்லியில் நடந்த அரசின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் விளக்கப்பட்டது. பீகாரில் நீர்வழிச் சாலை திட்டத்தை ஏற்று, மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர். மத்திய அரசும், இத்திட்டத்தை தேசியத் திட்டம் என ஏற்று, ஆய்வுக்கு நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்திலும் நீர்வழிச் சாலை திட்டத்தை ஏற்பது குறித்து, முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களுடனும், நீர்வழி இணைப்பை ஏற்படுத்தலாம்.
இது, கடல் மட்டத்தில் இருந்து, 250 மீ., உயரத்தில், 900 கி.மீ., நீளம் அமையும். காவிரியில் அதிகத் தண்ணீர் வீணாகும்போது, அதை, வைகை, தாமிரபரணி, பாலாறுக்கு அனுப்ப முடியும். இதை குடிநீர், பாசனம், மின் உற்பத்திக்கும் பயன்படுத்தலாம். நீர்வழிப் பாதையால் எரிபொருள் செலவும் வெகுவாகக் குறையும். சுற்றுச்சூழலும் மேம்படும்,.
இவ்வாறு, காமராஜ் கூறினார்.