கோவில்பட்டி :கோவில்பட்டியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அஞ்சல் ஊழியர்கள் ஆர்பிஎல்ஐ.ஸரால் மிரட்டப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது உட்பட ஒன்பது அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் ஊழியர் சங்க பி3 சுவாமிநாதன், பி4 கண்ணன், ஜிடிஎஸ் பிரிவு மணி ஆகியோர் தலைமை வகித்தனர். தொடர் ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதுடன் மாநில உதவி செயலாளர் தியாகராஜன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.