மதுரை : மதுரை தெற்குவாசல் குப்புபிள்ளை தோப்பைச் சேர்ந்தவர் நூர்ஜஹான், 30.
இவரது கணவர் காதர் சுல்தான். இருவருக்கும் 2008ல் திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. நான்கு மாதங்களுக்கு முன், மொபைல் போன் கடை நடத்தியதில் காதர்சுல்தானுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து, ரூ.3 லட்சம் வரதட்சணை கேட்டு மாமியார் நிலோபர்நிஷா வற்புறுத்தினார். இதனால் நேற்று முன் தினம் வீட்டில் நூர்ஜஹான் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.