/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கிடப்பில் பள்ளி கூடுதல் கட்டட பணி ரூ.1 கோடி நிதி ஒதுக்கியும் பலனில்லைகிடப்பில் பள்ளி கூடுதல் கட்டட பணி ரூ.1 கோடி நிதி ஒதுக்கியும் பலனில்லை
கிடப்பில் பள்ளி கூடுதல் கட்டட பணி ரூ.1 கோடி நிதி ஒதுக்கியும் பலனில்லை
கிடப்பில் பள்ளி கூடுதல் கட்டட பணி ரூ.1 கோடி நிதி ஒதுக்கியும் பலனில்லை
கிடப்பில் பள்ளி கூடுதல் கட்டட பணி ரூ.1 கோடி நிதி ஒதுக்கியும் பலனில்லை
ADDED : ஜூலை 27, 2011 11:15 PM
சிறுபாக்கம் : கிடப்பில் போடப்பட்டுள்ள மங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடம் கட்டும் பணியை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறுபாக்கம் அடுத்த மங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாததால் இடநெருக்கடியான சூழலில் மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை மூலம் நபார்டு திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 12 அறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதற்கான டெண்டர் விடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஜல்லி, கம்பிகள் கொண்டு வரப்பட்டு புதிய கட்டடங்களின் கட்டுமான பணிகள் துவங்கின.
ஆனால் என்ன காரணத்தினாலோ பணிகள் தொடர்ந்து நடக்காமல் கிடப்பில் போடப்பட்டன. கட்டுமானப் பணிக்காக வந்த கம்பிகள் துருப்பிடித்து வருகின்றன.இட நெருக்கடி காரணமாக பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.மேலும் மாணவர்கள் விளையாடும்போது கட்டுமான பணிக்கு வந்த கம்பிகள், ஜல்லிகளில் விழுந்து காயமடையும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது.ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அரசு நிதி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.