Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பழங்கால நாணயங்களால் சுதந்திர தின வாழ்த்து மடல் தயாரித்த முதியவர்

பழங்கால நாணயங்களால் சுதந்திர தின வாழ்த்து மடல் தயாரித்த முதியவர்

பழங்கால நாணயங்களால் சுதந்திர தின வாழ்த்து மடல் தயாரித்த முதியவர்

பழங்கால நாணயங்களால் சுதந்திர தின வாழ்த்து மடல் தயாரித்த முதியவர்

ADDED : ஆக 14, 2011 10:50 PM


Google News
பொள்ளாச்சி : சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பழங்காலத்து நாணயங்களை கொண்டு வாழ்த்து மடலை வடிவமைத்துள்ளார் பொள்ளாச்சியை சேர்ந்த முதியவர்.

பொள்ளாச்சி - பல்லடம் ரோடு ரத்தின சபாபதி புரத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (73); காகித கவர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர், 50 ஆண்டுகளாக பழங்கால நாணயங்கள், அரிய வகை ரூபாய் நோட்டுகளை சேகரித்து வருகிறார். இதுவரை, ஒரு பைசா, 25 பைசா, 10 பைசா, மன்னர் காலத்து நாணயங்கள் என மொத்தம் ஐந்தாயிரம் நாணயங்கள் சேகரித்துள்ளார். நாட்டின் 65வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படவுள்ளதால், இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பழைய நாணயங்கள் கொண்டு வாழ்த்து வாசகத்தை தயாரித்துள்ளார். இதில், 25 பைசா, ஒரு பைசா, 10 பைசா நாணயங்கள் கொண்டு வடிவமைத்துள்ளார். வெங்காடசலம் கூறுகையில், ''சிறு வயது முதலே பழங்காலத்து நாணயங்கள் சேகரிக்கும் பழக்கம் உண்டு. நாளை (இன்று) கொண்டாடப்படும் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும், நாணயங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த மடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்தில், நாணயங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.இதில், 450, 25 பைசா நாணயங்களும், ஆயிரத்து 400 ஒரு பைசா நாணயங்களும், 200, 10 பைசா நாணயங்களும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும், 38 சிறிய அளவிலான தேசிய கொடி வைத்து 'பார்டர்' போன்று வடிவமைத்துள்ளேன்'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us