/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வத்திராயிருப்பில் நக்சல்கள் போலீசார் தேடுதல் தீவிரம்வத்திராயிருப்பில் நக்சல்கள் போலீசார் தேடுதல் தீவிரம்
வத்திராயிருப்பில் நக்சல்கள் போலீசார் தேடுதல் தீவிரம்
வத்திராயிருப்பில் நக்சல்கள் போலீசார் தேடுதல் தீவிரம்
வத்திராயிருப்பில் நக்சல்கள் போலீசார் தேடுதல் தீவிரம்
ADDED : ஆக 17, 2011 12:13 AM
.வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மலை பகுதிகளில் நக்சல்கள், சமுக
விரோதிகள் நடமாட்டம் உள்ளதா என போலீசார் தீவிரமாக தேடி
வருகின்றனர்.அத்திகோயில் மலை பகுதியில் பளியர் குடியிருப்பு உள்ளது.
சில
நாட்களுக்கு முன் முகமூடி அணிந்த நபர்கள் குடியிருப்பு பகுதியில் தாக்குதல்
நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். தெரு விளக்குகளுக்காக போடப்பட்ட சோலார்
மின் கம்பங்களில் பிளேட்டுகளை திருடி சென்றனர். மலையில் பதுங்கியுள்ள சமூக
விரோதிகள் தங்களது தகவல் தொடர்பு சாதனங்களின் பேட்டரி போன்றவற்றை இயக்க
திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர் . தீவிர ரோந்து பணியை
துவக்கியுள்ளனர். நேற்று ஏ.டி.எஸ்.பி சாமிநாதன் தலைமையில் 28 பேர் கொண்ட
குழுவினர் பிளவக்கல் அணை பகுதியில் தேடுதல் வேட்டையை துவக்கினர். தொடந்து
தேடுதல் நடக்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.