ADDED : ஆக 14, 2011 02:49 AM
புதுச்சேரி : சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புதுச்சேரியில் பலத்தபோலீஸ்
பாதுகாப்பு பெய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் சுதந்திர தின விழா, உப்பளம்
இந்திராகாந்தி மைதானத்தில் நாளை கொண்டாடப் படுகிறது.
விழாவில், முதல்வர்
ரங்கசாமி தேசியக் கொடியேற்றி, உரை நிகழ்த்துகிறார்.இதையொட்டி, போலீசார்
விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விழா நடக்கும் மைதானத்தைப்
போலீசார் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.நகரப் பகுதியில்
உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள் உள்ளிட்ட தங்குமிடங்கள், பஸ் நிலையம், ரயில்
நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பை
தீவிரப் படுத்தி உள்ளனர். மேற்கண்ட இடங்களில் போலீசார் மோப்ப நாயுடன்
சென்று, சோதனையில் ஈடுபட்டனர்.மேலும், கவர்னர் மாளிகை, சட்டசபை, கடற்கரை
பாலை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.