Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பாதயாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் பஸ் மோதி படுகாயம்

பாதயாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் பஸ் மோதி படுகாயம்

பாதயாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் பஸ் மோதி படுகாயம்

பாதயாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் பஸ் மோதி படுகாயம்

ADDED : ஜூலை 26, 2011 01:07 AM


Google News

நகரி : தமிழகத்தில் இருந்து திருமலைக்கு, பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது, ஆந்திர ஆர்.டி.சி., பஸ் மோதியதில், ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த, 20 பேர் கொண்ட, பக்தர் குழுவினர், புத்தூர் அடுத்த வடமால் பேட்டை தாசில்தார் அலுவலகம் அருகே, சாலை ஓரமாக, திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருத்தணியில் இருந்து, திருமலைக்கு சென்ற ஆர்.டி.சி., பஸ் மோதியதில், பக்தர் குழுவைச் சேர்ந்த பிரகாஷ், சதாசிவம், மணி, துரை, வேலு ஆகிய ஐந்து பேர், பலத்த காயமடைந்தனர். அரசு ஆம்புலன்ஸ் உதவியுடன், திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்கள் ஐவரும், சிகிச்சை பெற்று வருகின்றனர். வடமால் பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us