/உள்ளூர் செய்திகள்/மதுரை/மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள்பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிமேலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள்பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள்பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள்பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள்பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
ADDED : ஆக 01, 2011 02:05 AM
மேலூர்:மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில்,
இருக்கும் டாக்டர்களும் விடுமுறையில் செல்வதால் நோயாளிகள்
அவதிக்குள்ளாகின்றனர்.நான்கு வழிச்சாலையிலுள்ள மேலூர் அமைந்துள்ளதால்,
விபத்துக்களில் சிக்குவோர் இந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
மேலூரை சுற்றிய கிராமத்தினரும் இங்கு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்
விபத்து காப்பீட்டு பிரிவு, பொது பிரிவு என ஆஸ்பத்திரி
விரிவுபடுத்தப்பட்டது. இங்கு 20 டாக்டர் பணியிடங்கள்
அனுமதிக்கப்பட்டுள்ளன.பல பணியிடங்கள் காலியாக இருப்பதுடன், இருக்கும்
டாக்டர்களில் பலர் விடுமுறையில் தொடர்ந்து இருப்பதால், நோயாளிகள் நீண்ட
வரிசையில் காத்திருக்கின்றனர். விபத்து நேரங்களில் நோயாளிகளை கவனிப்பதில்
சிரமம் ஏற்படுகிறது. அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் நந்தகுமார், ''20
டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும், ஆனால் 13 பேர் மட்டும் உள்ளனர்.
நான்கு பேர் நீண்ட விடுப்பில் உள்ளனர். மீதமுள்ள 9 பேரில் நான்கு பேர்
அமாவாசையை முன்னிட்டு விடுப்பு எடுத்து விட்டனர். அரசு ஆஸ்பத்திரிகளில்
காலியிடங்கள் நிரப்பப்படாமல் தான் உள்ளது,''என்றார்.