புதுச்சேரி : தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பட்டியலின துணைத் திட்ட கோரிக்கை சாசன ஆய்வரங்கம் அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் சுப்பையா வரவேற்றார்.
முன்னணி அமைப்பாளர் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழக அரசு சமூகக் கண்காணிப்பக இயக்குனர் குமார், மண்ணுரிமைக் கூட்டமைப்பு நிக்கோலஸ், மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளர் பிலவேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட துணைத் திட்ட நிதி எந்தெந்தத் திட்டங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் ஆய்வரங்கில் வலியுறுத்தப்பட்டன. மேலும், இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


