/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியில் நள்ளிரவில் பயங்கரம் பஸ் மோதி தள்ளுவண்டிவியாபாரிகள் 2 பேர் பலிதிருச்சியில் நள்ளிரவில் பயங்கரம் பஸ் மோதி தள்ளுவண்டிவியாபாரிகள் 2 பேர் பலி
திருச்சியில் நள்ளிரவில் பயங்கரம் பஸ் மோதி தள்ளுவண்டிவியாபாரிகள் 2 பேர் பலி
திருச்சியில் நள்ளிரவில் பயங்கரம் பஸ் மோதி தள்ளுவண்டிவியாபாரிகள் 2 பேர் பலி
திருச்சியில் நள்ளிரவில் பயங்கரம் பஸ் மோதி தள்ளுவண்டிவியாபாரிகள் 2 பேர் பலி
ADDED : ஆக 09, 2011 01:19 AM
திருவெறும்பூர்: திருச்சியில், நள்ளிரவில் அதிவேகத்தில் வந்த அரசு பஸ்
மோதி, தள்ளுவண்டி பொம்மை வியாபாரிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் லியாகத்
அலி (33). தள்ளுவண்டியில் எவர்சில்வர், பிளாஸ்டிக் பொருட்கள், பொம்மைகள்
விற்பனை செய்பவர். இவரது மகன் மெகபூப் அலி (12). இதே பகுதியில் உள்ள
பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இருவரும் நேற்று முன்தினம்,
காட்டூரில் உள்ள சர்ச் விழாவில் கடை போட்டிருந்தனர்.லியாகத் அலிக்கு
உதவியாக, இதே பகுதியை சேர்ந்த ரகமத்துல்லா (37) இருந்தார். வியாபாரம்
முடித்து நேற்று முன்தினம் நள்ளிரவில் மூவரும் வீடு திரும்பினர். மெகபூப்
அலி தள்ளுவண்டியில் படுத்திருக்க, இருவரும் வண்டியை தள்ளினர்.
நள்ளிரவு
இரண்டு மணியளவில், அரியமங்கலம் போலீஸ் செக்போஸ்ட் அருகே வந்தபோது, பின்னால்
அதிவேகத்தில் வந்த அரசு பஸ் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது.பஸ் மோதியதால்
தூக்கி வீசப்பட்ட மூவரும் படுகாயம் அடைந்தனர். இதில் ரகமத்துல்லா சம்பவ
இடத்திலேயே இறந்தார். லியாகத் அலி, மகபூப் அலி, திருச்சி மாவட்ட அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை
பலனின்றி லியாகத் அலி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மெகபூப் அலி
சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்சி மாநகர தெற்கு
போக்குவரத்து பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர்
முருகானந்தத்தை கைது செய்தனர்.


