/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கண்துடைப்பு பட்ஜெட்: பாஸ்கர் ஆவேசம்கண்துடைப்பு பட்ஜெட்: பாஸ்கர் ஆவேசம்
கண்துடைப்பு பட்ஜெட்: பாஸ்கர் ஆவேசம்
கண்துடைப்பு பட்ஜெட்: பாஸ்கர் ஆவேசம்
கண்துடைப்பு பட்ஜெட்: பாஸ்கர் ஆவேசம்
ADDED : ஆக 29, 2011 11:02 PM
புதுச்சேரி : 'வேலை வாய்ப்புகளை வழங்க கூடிய தொலைநோக்கு திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை' என, பாஸ்கர் எம்.எல்.ஏ., கூறினார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரத்தை பெருக்கவோ, சிறுசேமிப்பை ஊக்குவிக்கவோ பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. வளர்ச்சி திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் எதுவும் இல்லை. புதுச்சேரியில் சமச்சீர் கல்வி புத்தகங்களை கூட சரியாக கொடுக்கவில்லை. இங்குள்ள தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வி நடத்தப்படவில்லை. இங்கு வழங்கப்படும் புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்டா மல் கொடுக்கின்றனர். கல்வியில் தமிழகத்தை பின்பற்றுவதாக கூறுவது தவறு. விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் பரிசுத்தொகை அறிவித்தபடி வழங்கப்படுவதில்லை. படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய எவ்வித தொலைநோக்கு திட்டங்களும் இல்லை. வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய கனரக தொழிற்சாலைகளை பற்றி அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. பாம்புக் கடிக்கு மருந்து இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும். அங்கு இ.சி.ஜி., மெஷின்களை வாங்கி வைக்க வேண்டும்;ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும். மக்கள் முன்னேற்றத்திற்கு பட் ஜெட்டில் எதுவும் இல்லை. வெறும் அறிவிப்போடு இருக்கிறது. என்னுடைய தொகுதியில் இலவச அரிசி வழங்கப்படவில்லை. 3 மாதத்திற்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை சேர்த்து 45 கிலோவாக வழங்குவார்களா... முதியோர் பென்ஷன் 2 ஆயிரம் என அறிவித்தனர். அறிவிப்புதான் 100 நாள் சாதனை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் கண்துடைப்பு பட்ஜெட். இவ்வாறு அவர் பேசினார்.