Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி வனத்துறை காப்பகத்தில் குஞ்சு பொறித்துள்ள மலைப்பாம்பு

புதுச்சேரி வனத்துறை காப்பகத்தில் குஞ்சு பொறித்துள்ள மலைப்பாம்பு

புதுச்சேரி வனத்துறை காப்பகத்தில் குஞ்சு பொறித்துள்ள மலைப்பாம்பு

புதுச்சேரி வனத்துறை காப்பகத்தில் குஞ்சு பொறித்துள்ள மலைப்பாம்பு

ADDED : ஜூலை 28, 2011 10:46 PM


Google News

புதுச்சேரி : புதுச்சேரி வனத்துறை காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மலைப்பாம்பு குஞ்சு பொறித்துள்ளது.

புதுச்சேரி வனத்துறை காப்பகத்தில் 20க்கும் மேற்பட்ட பாம்புகள் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. இங்கு இந்தியன் ராக் பைத்தான் எனப்படும் இரண்டு மலைபாம்புகள் உள்ளன. இதில் 7 அடி நீளம்கொண்ட பெண் மலைப் பாம்பு கடந்த மே மாதம் 31ம் தேதி 18 முட்டைகளை இட்டது.



முட்டைகளைப் பொறிப்பதற்கு நவீன 'இங்குபேட்டர்' வசதி இருந்தாலும், புதுச்சேரியில் முதல் முறையாக மலைப்பாம்பு முட்டையிட்டு இருப்பதால் அப்பாம்பு மூலமே அடைகாக்க வைத்து குஞ்சுகளைப் பொறிக்க வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். மலைப்பாம்பு குஞ்சு பொறிக்க வசதியாக காட்டில் உள்ளதைப் போன்று இயற்கை சீதோஷ்ண நிலையை வனத்துறையில் ஏற்படுத்தி கொடுத்து கவனமுடன் பாராமரித்து வந்தனர். 58 நாட்களுக்குப் பின் தற்போது முட்டையிருந்து 6 பாம்பு குட்டிகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு குட்டியின் நீளமும் சராசரியாக 23 செ.மீ இருந்தது.



தாய் மலைப்பாம்பினால் குட்டிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் முதலில் வெளிவந்த 2 குட்டிகளையும் தனியாக பிரித்து மண் பானையில் வைத்துள்ளனர். சரிவர வெளிவராத குட்டிகள் தாய் பாம்பு பராமரிப்பிலேயே விடப்பட்டது. இன்று முட்டையில் இருந்து அனைத்துப் பாம்புக் குட்டிகளும் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வனத்துறை டாக்டர் குமரன் கூறுகையில், 'முட்டையிடுவதற்கு முன்பிருந்தே, மொத்தம் 68 நாட்கள் மலைப்பாம்பு சாப்பிடாமல் இருந்து அடைகாத்து குஞ்சுகளைப் பொறித்துள்ளது. பொதுவாக மலைபாம்பு குட்டிகள் பிறந்த ஒரிரு வாரங்கள் எந்த உணவையும் உட்கொள்ளாது. குட்டிகளின் உணவுக்காக வனத்துறையில் எலிகள் வளர்க்கப்படுகிறது. பிறந்த சில நாட்களேயான எலி குட்டிகள் பாம்பு குட்டிகளுக்கு உணவாக வழங்கப்படும் என்றார்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us