/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானி காவிரியில் நீரில் மூழ்கி வாலிபர் பலிபவானி காவிரியில் நீரில் மூழ்கி வாலிபர் பலி
பவானி காவிரியில் நீரில் மூழ்கி வாலிபர் பலி
பவானி காவிரியில் நீரில் மூழ்கி வாலிபர் பலி
பவானி காவிரியில் நீரில் மூழ்கி வாலிபர் பலி
ADDED : செப் 14, 2011 01:11 AM
பவானி: பவானி காவிரியாற்றில் குளித்த வாலிபர் பலியானார்.பவானி, ஒலகடம் அருகே குன்றியூரை சேர்ந்த பச்சமுத்து மகன் மணிகண்டன் (17).
பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் வீட்டில் சும்மா இருந்து வந்தார். நேற்று காலை தனது நண்பர்கள் ஆறு பேருடன், பவானி காவிரியாற்றுக்கு குளிக்க வந்தார்.பவானி புதிய பஸ் ஸ்டாண்டு அருகே காவிரியில் குளித்தனர். அவர்களில் நான்கு பேரை காவிரி வெள்ளம் இழுத்துச் சென்றது. கரையில் இருந்தவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு, அப்பகுதி மீனவர்கள் ஆற்றுக்குள் குதித்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும், மூன்று பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் இறந்தார். அவரது உடல்தான் மீட்கப்பட்டது. பவானி போலீஸார் விசாரிக்கின்றனர்.