Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்: 25 பேர் மனுதாக்கல்

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்: 25 பேர் மனுதாக்கல்

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்: 25 பேர் மனுதாக்கல்

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்: 25 பேர் மனுதாக்கல்

ADDED : செப் 26, 2011 06:45 PM


Google News

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று ஒரே நாளில் 16 பேர் மனு தாக்கல் செய்தனர்.

தமிழக அமைச்சராக இருந்த மரியம்பிச்சை சாலைவிபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அக்டோபர் 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது. அ.தி.மு.க., சார்பில் பரஞ்சோதியும், தி.மு.க., சார்பில் நேருவும் மனு தாக்கல் செய்தனர். இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் குவிந்தனர். இன்று மட்டும் 16 பேர் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 25 பேர் மனு தாக்கல் செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us