ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம்: மாநில தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு
ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம்: மாநில தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு
ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம்: மாநில தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு
ADDED : செப் 26, 2011 10:34 PM
சென்னை :ம.தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்று, உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியுள்ளதாக மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.இது குறித்து மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பு:கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் வழங்குவதற்கான அறிவுரைகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ம.தி.மு.க., கோரிக்கையை ஏற்று, மத்திய தேர்தல் கமிஷன் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் வழங்கியது. அதேபோல், இந்த தேர்தலிலும் ம.தி.மு.க.,விற்கு பம்பரம் சின்னம் வழங்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் கோரிக்கையை ஏற்று, சிங்கம் சின்னத்தை அக்கட்சிக்கு ஒதுக்கவும் மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.