கைதியின் ஜாதி கேட்க கூடாது சிறை விதிகளில் திருத்தம்
கைதியின் ஜாதி கேட்க கூடாது சிறை விதிகளில் திருத்தம்
கைதியின் ஜாதி கேட்க கூடாது சிறை விதிகளில் திருத்தம்
ADDED : மே 21, 2025 06:01 AM

சென்னை : 'சிறைகளில் கைதிகளின் ஜாதியை கேட்பது, ஜாதி அடிப்படையில் பணி ஒதுக்குவது போன்றவை கூடாது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சிறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சிறைகளில் புதிய கைதியை அடைக்கும் போது, அவர்களின் ஜாதி தொடர்பான எந்த விபரங்களையும், சிறை அதிகாரிகள் விசாரிக்கவோ, பெறவோ, பதிவு செய்யவோ கூடாது. கைதிகளின் ஜாதி குறித்த விபரங்கள், பதிவேட்டில் பராமரிக்கப்படக் கூடாது.
கைதிகள் அவர்களின் ஜாதி அடிப்படையில் வகைப்படுத்தப்படவில்லை என்பதை, சிறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சிறைகளில் எந்த வேலையையும், கைதிகளின் ஜாதி அடிப்படையில் ஒதுக்கக்கூடாது. சிறைகளில் உள்ள, கழிவுநீர் தொட்டியை, ஆட்கள் வைத்து கைகளால் சுத்தம் செய்யக் கூடாது. இயந்திரங்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.