சபரிமலை ரயில் பாதைக்காக ரூ.32 கோடி: தனபால் எம்.பி., தகவல்
சபரிமலை ரயில் பாதைக்காக ரூ.32 கோடி: தனபால் எம்.பி., தகவல்
சபரிமலை ரயில் பாதைக்காக ரூ.32 கோடி: தனபால் எம்.பி., தகவல்

காலடி : 'சபரி ரயில் பாதைக்காக, அங்கமாலி-காலடி இடையே ரயில் பாதை அமைக்க, முதல் கட்டமாக ரூ.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது' என, தனபால் எம்.பி., தெரிவித்தார்.
ஆனால், நிலம் கையகப்படுத்தல் போன்ற பணிகளில் தடை ஏற்பட்டு வந்தது. தற்போது, மாநிலத்தில் புதிய ஆட்சி பதவியேற்றதும், சபரி ரயில் பாதை அமைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், முதல் கட்டமாக, நிலம் கையகப்படுத்தவும், இதுவரை கையகப்படுத்தியுள்ள நிலம் மற்றும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு, அதற்கான தொகையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, மத்திய ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்து வந்த, மம்தா பானர்ஜியிடம் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக, 32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தனபால் எம்.பி., தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சபரி ரயில் பாதை திட்டத்தின் முதல் கட்டமாக, அங்கமாலி முதல் காலடி வரை, ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில், தற்போது பெரியாறு நதியின் குறுக்கே, பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது நடந்து வரும், 12 கி.மீ., தூரத்திற்கான பணிகளை விரைவுபடுத்த, மூவாற்றுப்புழாவில் செயல்பட்டு வரும் சபரி ரயில் பாதை திட்டத்திற்கான செயல் பொறியாளர் அலுவலகத்தை, துணை முதன்மை பொறியாளர் அலுவலகமாக உயர்த்த வேண்டும் என, மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அங்கமாலி-காலடி ரயில் பாதையை, இவ்வாண்டுக்குள்ளேயே முடிக்க, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.