ஒடிசாவில் மழை, வெள்ளம் 11 லட்சம் பேர் பாதிப்பு
ஒடிசாவில் மழை, வெள்ளம் 11 லட்சம் பேர் பாதிப்பு
ஒடிசாவில் மழை, வெள்ளம் 11 லட்சம் பேர் பாதிப்பு

புவனேஷ்வர் :ஒடிசா மாநிலத்தில், மழை வெள்ளம் காரணமாக, 19 மாவட்டங்களைச் சேர்ந்த 11 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹிராகுட் அணை நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மகாநதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.மழை, வெள்ளம் காரணமாக, அம்மாநிலத்தில், 19 மாவட்டங்களைச் சேர்ந்த 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்திற்கு இதுவரை எட்டு பேர் பலியாகியுள்ளனர்; மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் 61 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்கியவர்கள், படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை, ஒடிசா மாநில அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. 152 வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.