/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மகளிர் திட்டத்தில் கட்டப்பட்ட கிராமிய சந்தைகள் முடக்கம்மகளிர் திட்டத்தில் கட்டப்பட்ட கிராமிய சந்தைகள் முடக்கம்
மகளிர் திட்டத்தில் கட்டப்பட்ட கிராமிய சந்தைகள் முடக்கம்
மகளிர் திட்டத்தில் கட்டப்பட்ட கிராமிய சந்தைகள் முடக்கம்
மகளிர் திட்டத்தில் கட்டப்பட்ட கிராமிய சந்தைகள் முடக்கம்
ADDED : செப் 11, 2011 11:15 PM
விருதுநகர் : தமிழகத்தில் மகளிர் திட்டத்தில் கட்டப்பட்ட கிராமிய சந்தைகள், நிதி இல்லாததால் முடக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, அந்தந்த கிராமப்பகுதியிலேயே விற்பனை செய்ய, மகளிர் திட்டத்தின் கீழ், 100 கிராமிய சந்தைகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு போக மீதமுள்ள கடைகளை தொழில்கள் நடத்துவதற்கு வாடகைக்கு விடப்படும், என தெரிவிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.15 லட்சம் மதிப்பில் 11 கடைகளும், கடைகளை நிர்வகிக்கும் அலுவலகம், கிடங்கு ஒன்று என வடிவமைத்து, கிராமிய சந்தைகள் கட்ட 50 சத தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்காரர்கள் பணிகளை பல இடங்களில் முடித்துள்ளனர். பல இடங்களில் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன. நிறைவு பெற்ற பகுதிகளில் ஒப்பந்தகாரர்களுக்கு மீதமுள்ள 50 சத தொகை வழங்காததால், புதிய கட்டடங்களை ஒப்படைக்காமல் உள்ளனர். கிராமிய சந்தைகள் திறக்கப்படவில்லை. அரசு நடவடிக்கை எடுத்து கிராமிய சந்தைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.