ADDED : செப் 30, 2011 01:31 AM
மூணாறு : மூணாறில் ஜூம்ஆ மஸ்ஜித்தின் திறப்பு விழா,மத ஒற்றுமையை எடுத்துக்காட்டும் விதத்தில் அனைத்து மதத்தினரும் பங்கேற்க நடந்தது.
மூணாறில் முஸ்லீம் ஜமாத் சார்பில் ஜூம்ஆ மஸ்ஜித் புதுப்பிக்கப்பட்டது. இதனை லுகர் தொழுகையுடன் பானக்காடு செய்யது சாதிக்அலி ஷிஹாப்தங்கள் தொடங்கி வைத்தார். மூணாறு முஸ்லீம் ஜமாத் குழு தலைவர் காதிர் குஞ்சு தலைமை வகித்தார். ஆரூண் எம்.பி., தேவிகுளம் சப் கலெக்டர் ராஜமாணிக்கம்,முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மணி, சுந்தரமாணிக்கம், மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாக குழு தலைவர் பாபுலால், பாதிரியார்கள் ஜோஸ்குருவிளா காடன் துருத்தில், வைரமன், இம்மானுவேல்தாஸ் மற்றும் சர்வ மதத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். ரூ. பல கோடி செலவில் கலை நயத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ள ஜூம்ஆ மஸ்ஜித்தை சுற்றுலா பயணிகளும்,பொது மக்களும் பார்வையிட்டனர். மூணாறு முஸ்லீம் ஜமாத் குழு தலைவர் காதிர் குஞ்சு,பொது செயலாளர் கலீல்உஸ்மான், பொருளாளர் சுலைமான் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர். இன்று(செப். 30) மாலை 3 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது.