ஜாமினில் வந்த கருப்பசாமி பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
ஜாமினில் வந்த கருப்பசாமி பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
ஜாமினில் வந்த கருப்பசாமி பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
ADDED : செப் 30, 2011 10:50 PM
திருநெல்வேலி: ஜாமினில் விடுவிக்கப்பட்ட நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலர் கருப்பசாமி பாண்டியன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., செயலர் கருப்பசாமி பாண்டியன், கடந்த 10ம் தேதி காலை, நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது அண்ணன் சங்கரசுப்புவும் கைது செய்யப்பட்டார். பின், தனியார் 'டிவி' நிருபரை மிரட்டிய வழக்கிலும், இன்னொரு நிலமோசடி வழக்கிலும் கருப்பசாமி பாண்டியன் கைது செய்யப்பட்டார். ஒரு வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், இன்னொரு வழக்கில் ஜாமின் கிடைக்காமல், கடந்த 20 நாட்களாக மதுரை மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தார். கடந்த 29ம் தேதி மதுரை ஐகோர்ட், அவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டது. ஜாமின் உத்தரவை தி.மு.க., வழக்கறிஞர் தினேஷ், நேற்று காலையில் பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார். நேற்று காலையில் அவர் விடுவிக்கப்பட்டார். திருத்துவில் உள்ள வீட்டிற்கு சென்றார். பின்னர் 10 மணியளவில் ஜெ.எம்., முதலாவது கோர்ட்டில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டார். பின், வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நல சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்டார்.


