திருச்சி மேற்கு இடைத்தேர்தல்: 17 வேட்புமனுக்கள் ஏற்பு
திருச்சி மேற்கு இடைத்தேர்தல்: 17 வேட்புமனுக்கள் ஏற்பு
திருச்சி மேற்கு இடைத்தேர்தல்: 17 வேட்புமனுக்கள் ஏற்பு
ADDED : செப் 27, 2011 02:28 PM
திருச்சி:திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன.
திருச்சி மேற்கு இடைத்தேர்தல் அக்டோபர் 13-ம் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி துவங்கியது. இதி்ல் அ.தி.மு.க. சார்பில் பரஞ்ஜோதி, தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தேர்தல் அலுவலர் சம்பத் தலைமையில் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதம் 17 பேர் வேட்புமனு ஏற்கப்பட்டன.