/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஊராட்சி தலைவருக்கு களைகட்டும் வேட்புமனுஊராட்சி தலைவருக்கு களைகட்டும் வேட்புமனு
ஊராட்சி தலைவருக்கு களைகட்டும் வேட்புமனு
ஊராட்சி தலைவருக்கு களைகட்டும் வேட்புமனு
ஊராட்சி தலைவருக்கு களைகட்டும் வேட்புமனு
ADDED : செப் 23, 2011 01:05 AM
சிவகாசி : சிவகாசி உள்ளாட்சி தேர்தல் முதல்நாளே லாரிகளில் ஆட்களை ஏற்றி வந்து வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.
உள்ளாட்சி தேர்தலில் நகர் பகுதிகளை விட கிராமங்களில் தேர்தல் களைகட்டியுள்ளது. சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் மனுத்தாக்கல் துவங்கியதும் ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட ஆர்வமாக மனுக்களை பெற்றனர். மனுத்தாக்கல் துவங்கிய 15வது நிமிடத்திலேயே சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் 3 லாரிகள், 3 ஆட்டோக்களில் ஆண்களும், பெண்களும் அலுவலகம் வந்தனர். தங்களது ஆதரவாளர்களுடன் வந்த பாக்கியலட்சுமி ஊராட்சி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். அடுத்த சில மணிநேரத்தில் இதே ஊரை சேர்ந்த சிவக்குமாரி என்பவரும் ஆதரவாளர்கள் புடைசூழ வந்து மனுத்தாக்கல் செய்தார். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பலரும் மனுக்களை பெற்றுச்சென்றனர். வரும் 27ம்தேதி அம்மாவசை நல்ல நாள் என்பதால் அன்று மனுத்தாக்கல் அதிகரிக்கும். கிராம பகுதி மக்களிடம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதும் ஆதரவாளர்களை திரட்டுவதில் உற்சாகமாக களம் இறங்கியுள்ளனர். நகராட்சி: சிவகாசி நகராட்சியில் தலைவர் பதவிக்கு சிவகாசி பி.கே.எஸ்., தெருவை சேர்ந்த தியாகராஜன் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். திருத்தங்கல் நகராட்சியில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் செய்ய வில்லை.