/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/காணிக்கையின் கவனம் பராமரிப்பில் இல்லையேகாணிக்கையின் கவனம் பராமரிப்பில் இல்லையே
காணிக்கையின் கவனம் பராமரிப்பில் இல்லையே
காணிக்கையின் கவனம் பராமரிப்பில் இல்லையே
காணிக்கையின் கவனம் பராமரிப்பில் இல்லையே
ADDED : ஆக 14, 2011 04:55 PM

கோயில் குளம் கொண்ட ஊர்களில் குடியிருப்பதை பலரும் புண்ணியமாக கருதினர் அன்று.
அந்த வகையில் கோயிலையொட்டியுள்ள குளங்கள் புனிதமாக காட்சியளித்தன. இதுபோன்ற குளங்களில் இருந்து தான் குளத்தையொட்டிய கோயிலில் வீற்றிருக்கும் சுவாமிக்கான அபி@ஷகத்திற்கு தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். இதன் குளங்களுக்கும் தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களும் சுகாதாரமாக இருந்தன. ஆனால் இன்றோ இதன் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, கோயில் குளத்திற்கான தண்ணீர் வரத்திற்கு தடையாக உள்ளன. இதனால் பெரும்பாலான கோயில் குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. தண்ணீர் வரும் வசதியுள்ள குளங்களிலோ குப்பைகள் கொட்டப்பட்டு, அத்ன் தண்ணீரை மாசுபடுத்துகின்றனர். மேலும் நகரிலுள்ள அனைத்து கழிவுநீரும் இங்குதான் சங்கமிக்கும் அவல நிலையும் தொடர்கிறது. இதனால் கோயில் விழாக்களில் தெப்பத்திற்கு கூட பயன்படாத நிலையில் குளங்கள் காட்சியளிக்கின்றன. இதன் நிலையை கண்டு கோயில் வரும் பக்தர்கள் முகம்சுழிக்கும் அவல நிலை இன்றும் தொடர்கிறது. கோயில் காணிக்கை வசுலில் மட்டும் கவனம் செலுத்தும் அறநிலைய அதிகாரிகளும் இதனை கண்டு கொள்ளாதது ஏனோ...?