ADDED : ஆக 14, 2011 05:32 PM
காபூல்: ஆப்கானிஸ்தானின் பர்வாண் மாகாண கவர்னர் அப்துல் பஷீர் சலங்கியின் வீடு அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் 14 பொது மக்கள் 5 போலீசார் பலியானார்கள்.
37க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் பெரும்பாலோனோர் பொது மக்கள் என அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறினார். துப்பாக்கி சூடு நடந்து கொண்டிருக்கும் போதே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக கவர்னர் அப்துல் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.