/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியில் அரசு பஸ் மோதி சத்துணவு கண்காணிப்பாளர் சாவுதிருச்சியில் அரசு பஸ் மோதி சத்துணவு கண்காணிப்பாளர் சாவு
திருச்சியில் அரசு பஸ் மோதி சத்துணவு கண்காணிப்பாளர் சாவு
திருச்சியில் அரசு பஸ் மோதி சத்துணவு கண்காணிப்பாளர் சாவு
திருச்சியில் அரசு பஸ் மோதி சத்துணவு கண்காணிப்பாளர் சாவு
ADDED : ஆக 21, 2011 02:11 AM
திருச்சி: திருச்சியில் அரசு பஸ் மோதியதில் டூவீலரில் சென்ற சத்துணவு கண்காணிப்பாளர் பரிதாபமாக பலியானார்.
திருச்சி, நவல்பட்டு, அண்ணாநகரை சேர்ந்தவர் செல்லப்பா (42). இவர், மணிகண்டம் யூனியன் அலுவலகத்தில் சத்துணவு பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று பணியை முடித்துக் கொண்டு மதியம் 12 மணியளவில் டி.வி.எஸ்., எக்ஸல் டூவீலரில் வீட்டுக்கு புறப்பட்டார். திருச்சி குட்ஷெட் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தார்.
முடுக்குப்பட்டி அருகே செல்லும்போது, திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலிருந்து அறந்தாங்கி சென்ற அரசு பஸ் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பஸ் பின்சக்கரம் ஏறி மூளை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மாநகர தெ ற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்ஸை டி.வி.எஸ்., டோல்கேட் அருகே போலீஸார் மடக்கி பிடித்தனர். பஸ் அருகே உள்ள அரசு போக்குவரத்துக்கழக டெப்போவுக்குள் நிறுத்தப்பட்டது. இவ்விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.