Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்க சர்வே

வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்க சர்வே

வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்க சர்வே

வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்க சர்வே

ADDED : ஆக 13, 2011 01:18 AM


Google News

ராமநாதபுரம் : தமிழகத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக தெரு வாரியாக ஆய்வு பணி மேற்கொண்டு செப்.,2ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக வறுமைகோட்டின் கீழ் வசிப்பவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வசிக்கும் பகுதியில் தெரு குழாய்கள் உள்ளதா, அந்த பகுதியில் குடிநீர் எங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது, வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனரா, குடிநீர் இணைப்பு கட்டணம் எவ்வளவு போன்ற பல்வேறு தகவல்களை களப்பணியாளர்கள் நேரில் ஆய்வு செய்து தயாரித்து வருகின்றனர்.



இதன் அடிப்படையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வசிக்கும் பகுதியில் தெரு குழாய் முதல் வீட்டு இணைப்பு வரை எந்த திட்டத்தின் கீழ் வழங்கலாம், சலுகை அடிப்படையில் வழங்குவதா அல்லது இலவச இணைப்பு கொடுக்கலாமா என முடிவு செய்யப்படும்.



இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் குறித்து தெருவாரியாக கணக்கெடுக்க உள்ளோம். இதற்காக வழங்கப்பட்டுள்ள பட்டியலில் கேட்கப்பட்ட விபரங்களை சேகரித்து அனுப்பப்படும், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us