/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/மாம்பழத்துறையாறு அணை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்புமாம்பழத்துறையாறு அணை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
மாம்பழத்துறையாறு அணை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
மாம்பழத்துறையாறு அணை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
மாம்பழத்துறையாறு அணை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வில்லுக்குறி : மாம்பழத்துறையாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணை தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர்.
சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட உஞ்சலில் பெரியவர்களும் ஆனந்தமாக ஆடி மகிழ்கின்றனர். தற்போது புதுமண தம்பதிகள் திருமணத்திற்கு பின் வீடியோ எடுக்க அணை பகுதிக்கு வருவதும் அதிகரித்துள்ளது. தற்போது அணையின் உள்ளே மேல் பகுதியில் இயற்கையாக உள்ள முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இது அணையின் மேல்பகுதியில் இருந்து பார்த்தால் சில நேரங்களில் தெரியும். அணை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சியை பார்க்க வழி கேட்கின்றனர். கல்லூரி மாணவர்கள் கரடு முரடான, முழுமையான பாதை வசதி இல்லாத பகுதிகள் வழியாக நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று குளித்து வருகின்றனர்.
தங்களுடைய காமரா செல்போனில் படம் பிடித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் காண்பித்து அவர்களையும் பார்க்க தூண்டுகின்றனர். அண்மையில் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக மாற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் போன்றவர்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் செல்ல வேண்டுமானால் அது மிகவும் சிரமமான ஒன்றாகவே உள்ளது. இவர்களில் குளிக்க நினைப்பவர்கள் தற்போது அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சென்று குளித்து மகிழ்கின்றனர். முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்த்து மகிழும் வகையில் பாதை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதுபோல் மாம்பழத்துறையாறு அணைக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.