/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளி செல்லா குழந்தைகளுக்கு உபகரணங்கள்பள்ளி செல்லா குழந்தைகளுக்கு உபகரணங்கள்
பள்ளி செல்லா குழந்தைகளுக்கு உபகரணங்கள்
பள்ளி செல்லா குழந்தைகளுக்கு உபகரணங்கள்
பள்ளி செல்லா குழந்தைகளுக்கு உபகரணங்கள்
ADDED : செப் 20, 2011 01:19 AM
உடுமலை : உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான
கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை சிங்கப்பூர் நகர்
நகராட்சி தொடக்கபள்ளியில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி
செல்லா குழந்தைகளுக்கு கல்வி கற்க தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும்
நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் வரவேற்றார். குழந்தைகளுக்கு
கற்றல் உபகரணங்களை அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள் சுமதி,
அருணாதேவி வழங்கினர். உதவி ஆசிரியர் இந்தரா, மைய நடத்துனர் அருள் மேரி
உட்பட பலர் பங்கேற்றனர். குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி ஊராட்சி
ஒன்றிய நடு நிலைப்பள்ளியில், இடைநின்ற மாணவர்களுக்கான இணைப்பு மையத்தில்,
கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் மணி வரவேற்றார்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் நெல்சன், ராபின், சிவசுப்பிரமணியம், மேரிசுபா,
கவுசல்யா ராணி ஆகியோர் பங்கேற்றனர். 13 மாணவ, மாணவிகளுக்கு கற்றல்
உபகரணங்கள் வழங்கப்பட்டன. இணைப்பு மைய ஆசிரியர் சதிஷ் நன்றி கூறினார்.
பெரியவாளவாடியில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நேசக்கரங்கள்
அமைப்பு சார்பில் செயல்படும் ஜீவ நதி உண்டு, உறைவிட மையத்தில், கற்றல்,
கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேசக்கரங்கள்
இயக்குநர் பால்நிலா தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க உடுமலை
வட்டார மேற்பார்வையாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்து, மாணவர்களுக்கு
உபகரணங்களை வழங்கினார். ஆசிரியர் பயிற்றுநர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து
மாணவர்களின் பெற்றோர்களுக்கான கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 33
குழந்தைகள் கடந்தாண்டு தேர்ச்சி பெற்றனர். அதில், 21 பேர் பெரியவாளவாடி
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 12 பேர் பெரியவாளவாடி அரசு
மேல்நிலைப்பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர். நேசக்கரங்கள் இணை இயக்குநர்
நேசமணி நன்றி கூறினார். நேசக்கரங்கள் நிர்வாக அலுவலர், சிறப்பு ஆசிரியர்கள்
உட்பட பலர் பங்கேற்றனர்.


