/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி கோவில்களிலும் அன்னதான திட்டம் அமல்புதுச்சேரி கோவில்களிலும் அன்னதான திட்டம் அமல்
புதுச்சேரி கோவில்களிலும் அன்னதான திட்டம் அமல்
புதுச்சேரி கோவில்களிலும் அன்னதான திட்டம் அமல்
புதுச்சேரி கோவில்களிலும் அன்னதான திட்டம் அமல்
ADDED : ஆக 29, 2011 11:02 PM
புதுச்சேரி : 'கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும்' என, முதல்வர் ரங்கசாமி கூறினார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: ஓம்சக்தி சேகர், அன்பழகன், புரு÷ஷாத்தமன்: தமிழக அரசைப் பின்பற்றி, புதுச்சேரியில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுமா... முதல்வர் ரங்கசாமி: அந்தந்த ஆலயத்தின் நிதிநிலைகேற்ப இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். முதல்கட்டமாக, பெரிய கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம். ஓம்சக்தி சேகர்: அன்னதான திட்டத்திற்கு நன்கொடை தர நிறைய பேர் காத்திருக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, அன்னதான திட்டத்தை அறிவித்தவுடன், நிறைய தொழிலதிபர்கள், வியாபாரிகள் பல கோடி ரூபாய் நிதி தந்துள்ளனர். அன்பழகன்: தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா முடிவு எடுத்து சிறப்பான முறையில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டம் தொடர்பாக அரசின் கொள்கை முடிவு என்ன... முதலில் திட்டத்தை அறிவிப்பு செய்யுங்கள். முதல்வர் ரங்கசாமி: நல்ல திட்டம் என்றுதான் கூறுகிறேன். 3, 4 கோவில்களில் முதலில் எடுத்துக் கொள்ளலாம். நாஜிம்: பள்ளிவாசல்களில் நோன்பு நாட்களில் சகர் சாப்பாடு வழங்குவர். முதல்வர் ரங்கசாமி: நாஜிமின் ஆலோசனையும் எடுத்துக் கொள்ளப் படும்.