வேலூர் மாவட்டத்தில் லேசான நில நடுக்கம்
வேலூர் மாவட்டத்தில் லேசான நில நடுக்கம்
வேலூர் மாவட்டத்தில் லேசான நில நடுக்கம்
ADDED : ஆக 30, 2011 05:29 PM
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சிவ்வநாகல், தேங்கல் மூலை, குடியாத்தம் அடுத்த தரணம் பேட்டை, கொண்ட சமுத்திரம், பேர்ணாம்பட்டு அடுத்த மேல்பட்டி ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் நேற்று இரவு 10 மணி அளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.அங்குள்ள வீடுகள் அதிர்ந்தது. 'டிவி'க்களில் ஒளிபரப்பு நின்று போனது. கட்டில் லேசாக ஆடியது. வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அலறி, அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர். இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாலை 4 மணி வரை அங்கிருந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் வெளியே இருந்தனர். அதிகாரிகள் வந்து அவர்களை சமாதானப்படுத்திய பிறகே வீடுகளுக்கு சென்றனர்.''லேசான நில நடுக்கம் ஏற்பட்டது என்றும் பயப்படும்படி ஒன்றும் இல்லை, சேதமோ உயிர் இழப்பு எதுவும் இல்லை,'' என கலெக்டர் நாகராஜன் கூறினார்.


