/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வழக்கறிஞர் முருக்கம் முனுசாமி பா.ம.க.,விலிருந்து திடீர் விலகல்வழக்கறிஞர் முருக்கம் முனுசாமி பா.ம.க.,விலிருந்து திடீர் விலகல்
வழக்கறிஞர் முருக்கம் முனுசாமி பா.ம.க.,விலிருந்து திடீர் விலகல்
வழக்கறிஞர் முருக்கம் முனுசாமி பா.ம.க.,விலிருந்து திடீர் விலகல்
வழக்கறிஞர் முருக்கம் முனுசாமி பா.ம.க.,விலிருந்து திடீர் விலகல்
ADDED : ஆக 28, 2011 11:08 PM
திண்டிவனம் : பா.ம.க., இளைஞர் சங்க முன்னாள் மாநில நிர்வாகி வழக்கறிஞர் முருக்கம் முனுசாமி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பா.ம.க., முன்னாள் மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் வழக்கறிஞர் முருக்கம் முனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ம.க., அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை மிகுந்த மன உளைச்சலுடன் விடுவித்துக் கொள்கிறேன். பா.ம.க.,வில் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக உழைத்த நான், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காததை கண்டு மிகுந்த வேதனைக்கு ஆளாகினேன். தலித் எழில்மலை, ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன், முருகவேல்ராஜன் போன்ற தலித் தலைவர்கள் பா.ம.க., வளர்ச்சிக்கு உதவினர். ஆனால் அவர்களின் வளர்ச்சியை கட்சி தலைமை பொறுத்துக் கொள்ளவில்லை. கட்சியில் உழைத்தவர்களுக்கு, தேர்தல் நேரத்தில் சீட் மறுக்கப்படுகிறது. பண பலம் உள்ளவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் கட்சியிலிருந்து விலகுகின்றேன். இவ்வாறு வழக்கறிஞர் முருக்கம் முனுசாமி கூறியுள்ளார்.