Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை' : ஐவர் குழு அறிக்கை

"பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை' : ஐவர் குழு அறிக்கை

"பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை' : ஐவர் குழு அறிக்கை

"பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை' : ஐவர் குழு அறிக்கை

ADDED : செப் 06, 2011 11:58 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி: 'பத்மநாப சுவாமி கோவில், பாதாள அறைகளில் உள்ள, பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, ஓராண்டு காலம் தேவைப்படும்' என, ஐவர் குழு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த, இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது.



கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் உள்ள, பாதாள அறைகளில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை பார்வையிட்டு, மதிப்பீடு செய்ய, ஐவர் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. டில்லியில், தேசிய அருங்காட்சியக துணை வேந்தர் டாக்டர் ஆனந்தபோஸ் தலைமையிலான இக்குழு, கோவிலில் பொக்கிஷங்களை பாதுகாப்பது உட்பட, பல்வேறு பணிகளை துவக்கி ஆய்வு செய்தது. பாதாள அறைகளை திறப்பது குறித்து, கோவிலை நிர்வகித்து வரும் அறக்கட்டளையும், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும், தேவ பிரசன்னம் (சுவாமியின் கருத்து கேட்டல்) நடத்தினர்.



அதில், பாதாள அறைகளை திறந்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பி அறையை, மறு உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து, மன்னர் குடும்பத்தினர், சுப்ரீம் கோர்ட்டில், பாதாள அறைகளை திறக்க தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அம்மனு மீது, விசாரணை நடந்து வருகிறது.



இந்நிலையில், ஐவர் குழு, தன் இடைக்கால அறிக்கையை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், 'கோவில் பாதாள அறைகளில் உள்ள, பொக்கிஷங்களை திறந்து, மதிப்பீடு செய்து முடிக்க, ஓராண்டு காலம் தேவைப்படும். மேலும், பிரச்னைக்குரிய கடைசி அறை (பி)யை இப்போது திறக்க மாட்டோம். மதிப்பீடு பணிகளுக்காக, 2 கோடியே, 99 லட்ச ரூபாய் ஒதுக்கவேண்டும்' என, குறிப்பிட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us