ஆக்ரா குண்டுவெடிப்பு: 4 பேரிடம் விசாரணை
ஆக்ரா குண்டுவெடிப்பு: 4 பேரிடம் விசாரணை
ஆக்ரா குண்டுவெடிப்பு: 4 பேரிடம் விசாரணை
ADDED : செப் 18, 2011 06:06 PM
ஆக்ரா : ஆக்ராவில் குண்டுவெடித்தது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக்ராவில் உள்ள ஜெய் மருத்துவமனையில் குண்டுவெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். பலர் மீட்கப்பட்டனர். இதனையடுத்து போலீசார் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியை சீல்வைத்து பலத்த சோதனை செய்தனர். இதனிடையே தேசிய பாதுகாப்பு படை குண்டுவெடிப்பு தடுப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் பல தடயங்களை ஆய்வுக்காக öõõண்டு சென்றனர். இந்த குண்டுவெடிப்புக்கு மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உ.பி., மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர். ஆனால் இந்த குண்டுவெடிப்பிற்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என உறுதிப்படுத்த மறுத்து விட்டனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பேட்டரிகளும் வயர்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தகவல்களை சேகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு மத்திய உள்துறை இணையமைச்சர்கள் ஜிதேந்ர சிங் மற்றும் ராஜ் பாபர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என மாயாவதி அறிவித்துள்ளார். குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.