UPDATED : ஆக 18, 2011 10:46 AM
ADDED : ஆக 18, 2011 09:10 AM
புதுடில்லி: திகார் சிறையிலிருந்து ராம்லீலா மைதானத்திற்குச் செல்லும் முன் அன்னா ஹசாரேவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
வலிமையான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ராம்லீலா மைதானத்தில் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதியளித்ததையடுத்து, அவர் இன்று சிறையில் இருந்து வெளிவருகிறார். அதற்கு முன்பாக ஹசாரேவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.