/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., பொறுப்பேற்புகள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு
ADDED : ஆக 03, 2011 10:15 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ.,வாக உமாபதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடலூர் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளராக(நிலம்) பணியாற்றிய உமாபதி நேற்று காலை கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., வாக பொறுப்பேற்றார். இங்கு பணிபுரிந்த நாகபூஷணராஜூ பொறுப்பை உமாபதியிடம் ஒப்படைத்தார். தாசில்தார்கள் வைகுண்டவரதன், கோகுலபத்மநாபன், ஆர்.டி.ஓ., உதவியாளர் சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளர் குமரன், வி.ஏ.ஓ., முகமது கவுஸ் உடனிருந்தனர். உமாபதி 1997ம் ஆண்டு திருத்தணியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றியபோது சிறப்பாகவும், நேர்மையாகவும் பணியாற்றிய மைக்கு தமிழக அரசின் அண்ணாதுரை விருது வழங்கப்பட்டது.குடிமை பொருள் தனி தாசில்தாராக 2009ம் ஆண்டு பணிபுரிந்தபோது குடும்ப அட்டைகளை தீவிர ஆய்வு செய்து மாவட்டத்திலேயே குறைவான அளவு குடும்ப அட்டை வழங்கியதற்காக சிறந்த தாசில்தாராக கோலப்பன் கமிஷன் ராஜாராமன் விருது பெற்றுள்ளார்.