Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வேட்பு மனுக்கள் பரிசீலனை: கட்சி வேட்பாளர்களும் தப்பவில்லை

வேட்பு மனுக்கள் பரிசீலனை: கட்சி வேட்பாளர்களும் தப்பவில்லை

வேட்பு மனுக்கள் பரிசீலனை: கட்சி வேட்பாளர்களும் தப்பவில்லை

வேட்பு மனுக்கள் பரிசீலனை: கட்சி வேட்பாளர்களும் தப்பவில்லை

ADDED : செப் 30, 2011 11:14 PM


Google News

திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலுக்கு போட்டியிட தாக்கல் செய்த மனுக்கள், நேற்று பரிசீலனை செய்யப்பட்டன.

இதில், சில தே.மு.தி.க.,- தி.மு.க., வினரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நிதி முறைகேட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊராட்சித்தலைவரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.மனு பரிசீலனை விபரம்:திண்டுக்கல் நகராட்சி: வார்டு கவுன்சிலர் பதவிக்கு 456 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில், 13 பேரின் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.திண்டுக்கல்: மாவட்ட கவுன்சிலருக்கு, கட்சி வேட்பாளருக்கு மாற்றாக வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களின் ஐந்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து தற்போது எட்டு பேர் போட்டியில் உள்ளனர்.ஒன்றிய கவுன்சிலருக்கு ஐந்தாவது வார்டில் மனுத்தாக்கல் செய்த தே.மு.தி.க., வேட்பாளர் ஷீலா விற்கு நான்காவது வார் டை சேர்ந்தவர் முன்மொழிந்ததால் இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.எட்டாவது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர் காளீஸ்வரி பெயர் வாக்காளர் பட்டியலில் மாறி இருந்ததால் இவரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.மொத்தம் 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது 135 பேர் போட்டியில் உள்ளனர்.குறும்பபட்டி ஊராட்சித்தலைவர் பதவி பெண்(பொது) ஒதுக்கீட்டில் இருந்தது. இதற்கு மாரிமுத்து என்பவர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டது.பெரியகோட்டை ஊராட்சித்தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் குருசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இவர், ஊராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். எனவே இவர், போட்டியிட முடியாது என்பதால் இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.முள்ளிப்பாடி ஊராட்சிக்கு ராஜேந்திரன், சீலப்பாடி ஊராட்சிக்கு ஒருவர், என இருவரும், இரட்டை மனு தாக்கல் செய்திருந்ததால் இவர்களது மனுக்கள் உட்பட மொத்தம் ஐந்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. திண்டுக்கல் ஒன்றியத்தில் 14 ஊராட்சிக்கு 120 பேர் களத்தில் உள்ளனர்.சாணார்பட்டி: மாவட்ட கவுன்சிலருக்கு மாற்று வேட்பாளர் உட்பட நால்வரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களில் நால்வரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, மொத்தம் 116 பேர் களத்தில் உள்ளனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மொத்தம் 803 பேர் போட்டியில் உள்ளனர்.

அய்யலூர் பேரூராட்சி தலைவர் பதவி (காங்.,) வேட்பாளர் சந்தானலட்சுமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவர், தற்போது தலைவராக உள்ளார்.



நத்தம்: பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்த ஆறு பேரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கவுன்சிலர் பதவிக்கு ஆறு பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 82 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள் ளப்பட்டன.

நத்தம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலருக்கு மனு செய்திருந்த 15 பேரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஐந்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 99 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஊராட்சி தலைவர் பதவிக்கு, ஒருவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு 133 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.வார்டு உறுப்பினருக்கு 21 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, 742 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.வேடசந்தூர்: பேரூராட்சி நான்காவது வார்டில் கவுன்சிலருக்கு போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் மனு உட்பட மொத்தம் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.ஒன்றிய கவுன்சிலரில் இருவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.குஜிலியம்பாறை: ஒன்றிய கவுன்சிலருக்கு 81 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் நான்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டு 77 மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஊராட்சித்தலைவருக்கு 98 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 396 பேர் மனு செய்ததில், ஆறு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.பாளையம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு 12 பேரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கவுன்சிலர் பதவிக்கு 65 பேர் மனு செய்தனர். ஒருவர் மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.ரெட்டியார்சத்திரம்: மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 14 பேர் மனு தாக்கல் செய்ததில், 16 வது வார்டில் ஒரு வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 85 பேர் மனு தாக்கல் செய்ததில், 3 வது வார்டில் ம.தி.மு.க., வேட்பாளர், 6 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.ஊராட்சி தலைவர் பதவிக்கு 83 பேர் மனு தாக்கல் செய்தனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 282 பேர் மனுத் தாக்கல் செய்ததில், 13 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அகரம்: அகரம் பேரூராட்சியில் 9, 14 வது வார்டில் இரண்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.பழநி: பழநி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான மொத்த வேட்பு மனு(8)க்களில், இரண்டு தள்ளுபடி செய்யப்பட்டன. தே.மு.தி.க., வேட்பாளர் ஹேமலதாவின் மனு ஜாதிச்சான்று இல்லாததாலும்; காங்கிரஸ் வேட்பாளர் தமிழரசியின் மனு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததாலும் தள்ளுபடியாகின.ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான மொத்த வேட்பு மனு(110)க்களில், மூன்றாவது வார்டு ம.தி.மு.க., வேட்பாளர் சின்னப்பொண்ணுவின் மனு, ஜாதிச்சான்று இல்லாததாலும்; 21 வயதிற்கு குறைவாக இருந்ததால், 15வது வார்டு ம.தி.மு.க., வேட்பாளர் பிரியங்காவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன.ஊராட்சி தலைவர் பதவிக்கான 139 மனுக்களில், ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. வார்டு உறுப்பினர் பதவிக்கான மொத்த மனு (796)க்களில், 18 தள்ளுபடி செய்யப்பட்டன. பாலசமுத்திரம் பேரூராட்சியில் கவுன்சிலருக்கான ஒரு சுயேச்சை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நெய்க்காரபட்டி பேரூராட்சியில், கவுன்சிலருக்கான மொத்த வேட்புமனு(85)க்களில், 2வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர் முத்தமிழ்செல்வி, 13வது வார்டு மார்க்சிஸ்ட் வேட்பாளர் சையதுஅபுதாகீர், 7வது வார்டில் இரு சுயேச்சைகள் என, நான்கு பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆயக்குடி பேரூராட்சியில் மனு தள்ளுபடி இல்லை. தலைவர் பதவிக்கான 16 மனுக்களும், வார்டு கவுன்சிலர் பதவிக்கான 110 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us