ஆசிய நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா
ஆசிய நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா
ஆசிய நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா
ADDED : மே 20, 2025 04:23 AM

பாங்காக்: தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் மட்டும் இந்த மாத துவக்கத்தில் 14,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அங்குள்ள டாக்டர்கள் கூறுகையில், 'நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாகவே கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
'தற்போதைய கொரோனா மாறுபாடுகள் முந்தையதை விட அதிகமாக பரவும் திறன் கொண்டதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் ஜே.என். -1 எனப்படும் கொரோனா வைரசின் துணை வகை மிக வேகமாக பரவுகிறது' என்றனர்.